இருப்பவனுக்கோ வந்து விட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதல்...
விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்பட மட்டுமே முடிகிறது...
நாங்கள் பூஸிகொல்லும்
சென்ட்டில் வேணுமானால்
வாசனை இருக்கலாம்
ஆனால் வாழ்கையில்....
தூக்கம் விற்ற காசில்தான்
துக்கம் அழிக்கிறோம்
ஏக்கம் என்ற நிலையிலே
இளமை தொலைக்கிறோம் ...
உறவுகளின் திருமணம்
நெருங்கியவரின் மறைவு
பந்தங்களின் பாசம்
இப்படி ஏதுமே
அறிய முடிய
அயல்நாட்டு அகதிகள்.....
-யார் இந்த நண்பரோ அவரின் வரிகளுக்கு
நன்றிகள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக